224. பனங்காட்டீசர் கோயில்
இறைவன் பனங்காட்டீசர்
இறைவி சத்யாம்பிகை, புரவம்மை
தீர்த்தம் பதும தீர்த்தம்
தல விருட்சம் பனை மரம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருப்புறவார்பனங்காட்டூர், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது பனையபுரம் என்று அழைக்கப்படுகிறது. திண்டிவனம் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டியைத் (சுங்கச்சாவடியைத்) தாண்டி இடதுபுறம் தஞ்சாவூர் செல்லும் சாலையில் சென்றால் 2 கி.மீ. தொலைவில் இத்தலத்தை அடையலாம். விழுப்புரத்திற்கு அருகில் உள்ள முண்டியம்பாக்கத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

ஒரு புறாவிற்காக தனது தசையை அறிந்துக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி வழிவட்டதாலும் (புறவார்), பனை மரம் தல விருட்சமாக அமைந்த காரணத்தாலும், இத்தலம் திருப்புறவார் பனங்காட்டூர் என்று அழைக்கப்பட்டது.

சித்திரை மாதத்தின் முதல் ஏழு நாட்களும் காலையில் சூரிய உதயத்தின்போது அதன் கதிர்கள் முதலில் சுவாமியின்மீதும், பின்னர் அம்பிகையின் மீதும் விழுகின்றன. அறுபத்து மூவர் சன்னதியில் திருநீலகண்ட நாயனார் தமது துணைவியாருடன் சிறியகோலைப் பிடித்தபடி இருக்கும் உற்சவ மூர்த்தியைக் காணலாம்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இக்கோயில் திறந்திருக்கும். தொடர்புக்கு : 9942056781.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com